அது போன்ற ஒரு உரையாடலின் போது ஒரு நாத்திக நண்பரிடம் இருந்து நான் முஸ்லிம் என்பதால் கேட்கப்பட்ட கேள்வி "உங்கள் இறைவன் கருணையாளனென்றால் ஏன் கண் இல்லாதவர்களைப் படைத்து இன்னல்களுக்கு ஆளாக்கினான், அப்படியென்றால் உங்கள் இறைவன் கருணையில்லாதவன் தானே?". எனக்கு வயது 19 இருக்கும், அப்பொழுது இந்தக் கேள்விக்கு சத்தியமாக விடை தெரியவில்லை. காரணம் இஸ்லாமிய அறிவு இல்லாததுதான். மேலும், இந்தக் கேள்வியைக் கேட்டு தன்னை அறிவாளியாக காட்டிக் கொண்ட அந்த நாத்திகரிடம் "இதெல்லாம் கடவுள் செயல்" என்று ஒரு ரெடிமேட் பதிலைச் சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை. "சரி விடுங்க" கடவுள் இருந்தா இருக்கட்டும் இல்லைன்னா போகட்டும் என்று அவர் மனம் குளிரும் விதமாக பதிலைச் சொன்னதும் என்னை தோற்கடித்து விட்டதில் அவருக்கு அப்படி ஒரு திருப்தி.
கண் இல்லாதவர்களைக் காணும் பொழுது அவர்கள் மீது, கண் இருக்கும் நமக்கு ஒருவித இரக்கம் ஏற்ப்படத்தான் செய்யும்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, இறைவன் ஏதோ அவர்களைக் கண் இல்லாதவர்களாக படைத்து விட்டான் அவன் அவர்களைப் பாதுகாப்பான் என்றும்,
நாத்திகர்களுக்கு, இயற்கையின் ஒரு சில தோல்வி முயற்ச்சிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர்களுக்குள்ளாகவே சமாதனமாகி விடுவதும் உண்டு.
ஆனால், நமக்குக் கண் இருப்பதாலும் அவர்களுக்கு கண் இல்லாததாலும் என்ன வித்தியாசம், அவர்களிடமிருந்து நாம் எவ்விதத்தில் வேறுபடுகிறோம்? அவர்கள் நம்மிலிருந்து எவ்விதம் வேறுபடுகின்றனர்? என்பதை என்றேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?.
அப்படி சிந்திப்போமேயானால்,
"கண் இல்லாத அவர்கள்தான் நம்மைவிட எத்தனை மடங்கு பாக்கியசாலிகள்! நல்லோர்கள்!" என்ற முடிவுக்கு வர நீண்ட அவகாசம் தேவையில்லை.
ஒளிவு மறைவு இல்லாத வாழ்கை என்ற ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போம், அதை நம்மில் எத்தனை பேர் வாழ்கிறோம். கண்ணில்லாதவர்களைப் பொறுத்தவரை ஒளிவும் கிடையாது, மறைவும் கிடையாது, அதன் காரணமாகவோ என்னவோ மிகப் பெரும்பான்மையான கண்ணில்லாதவர்களின் இதயம் ஒளி உள்ள வெண்மை நிறமாக ஒளிர்கிறது.
பலகீனத்தை தங்களின் செயல்கள் மூலம் இவர்கள் தினசரி வெல்கிறார்கள்!,
நாம் வாழ்வின் நொடிப் பொழுதுகளில் எத்தனையோ காட்சிகளைக் காண்கின்றோம், ஆனால் அவை அனத்தையும் மனது என்ன தேக்கி வைத்துக் கொள்ளவா செய்கிறது?.
அப்படி ஒரு காட்சிதான் நான் எனது இரயில் பயணத்தில் நான் கண்டது, அது எனது 19ஆம் வயதில் நாத்திகரால் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக 25ஆம் வயதில்,
இரயில் "ரேஷன் கவர்", "ரிமோட் கவர்", "சீசன் டிக்கட் கவர்" etc. என்று பலவித சாமன்களை சுமந்து விற்றுக் கொண்டு வந்தார் ஒரு கண் பார்வை இல்லாதவர்.
ஒரு சிலர் சாமான்கள் வாங்கினர், நானும் சிசன் டிக்கட் கவர், பேனா என்று ஒரு சில 20 ரூபாய் மதிப்புள்ள சாமான்களை வாங்கினேன், அவரிடம் 50 ரூபாய் கொடுத்தேன் அவர் மீதம் 30 ரூபாயை, கரெக்ட்டாக ஒரு 20 ரூபாய் தாளயும் ஒரு 10 ரூபாய் தாளையும் அவ்வளவு லாவகமாக தடவி கொடுத்து, "சார் சேஞ் கரெக்ட்டா இருக்கா, பாத்துங்க சார், ரெம்ப தாங்ஸ் சார். ரிமோட் கவர், ரேஷன் கவர், பேனா" என்று கூவிக் கொண்டே, தனது வியாபரத்தை ஊன்று கோலின் உதவியுடன் தொடர்ந்தார்.
இரயிலில் பயணம் செய்வோர் இதை ஏதேனும் ஒரு சமயத்தில் கண்டிருக்கலாம்.
அவர்தான் என் கண் பார்வையில் இருந்து அகண்டாரேயொழிய, அவரின் நேர்மை என்னுள் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது!, காரணம் ஏமாற்றுவதற்கு அவரிடம் காரணிகள் இருந்தும் தன் விடா முயற்சியின் பலனாக ரூபாய் தாள்களை தடவி அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைக் கற்று, பொருட்களையும் விற்பனையும் செய்து பிழைக்கிறார் என்றால் அவருக்கு நம் மனதில் இடம் கொடுக்காமல் இருக்கலாமா?.
மேலும் என்னுள் இச்சம்பவம் என்னை நானே எடைபோட்டுக் கொள்ளவும் உதவியது.,
என்னிடம் ஒரு நூறு ரூபாயையோ அல்லது அதையும்விட குறைவான பணத்தையோ கொடுத்தால் என்னால் நிச்சயமாக தடவிப் பார்த்து எவ்வளவு என்று கூற இயலாது, "முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்" என்பதுதான் எத்துனை உண்மை!, அதுவும்! தனது உடலில் ஊனம் இருந்தும் தனது முயற்சியை தனது நேர்மைக்கு பறைசாற்றும் செயல்களைச் செய்யும் இவர்களிடம் இருந்து பெறும் படிப்பினைதான் என்ன??.
கிண்டி இரயில்வே ஸ்டேஷனுக்கு தினசரி வரும் கணவன் மனைவி!, கணவனுக்கு ஊன்றுகோல் துணை என்றால் மனைவிக்கு கணவனின் தோள் துணை, காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்! ஆனால் கண் இல்லாத காதல் கடைசிவரை நிலைக்கும் என்பதற்கு இவர்களின் மகிழ்ச்சி ஒரு ஆதாரம், அதென்னவோ தெரியவில்லை கண்பார்வையற்றவர்களின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது? ஆச்சரியம்தான்!.
இவர்களைப் பார்த்து கண் இல்லாதவர்கள் என்று பரிதாபப் படுகிறோம்??!!, இறைவன் கண் இல்லாதவர்களை "இருட்டை இரசிப்பதற்க்காவா" படைத்தான் என்று இறைவன் மீது கோபம் கொள்கிறோம்?!!, பாவம் நாம்!, பரிதாபப்படுவதற்கும், கோபப்படுவதற்கும் உரிய தகுதியில் நாம் இருக்கிறோமா?,
என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா? சகோதர சகோதரிகளே!.
நம்மை உயிர்களிடத்தில் உயர்ந்தோராக்குவது நமது எண்ணமும் செயலுமா? அல்லது நமது உடல் உறுப்புக்களா?.
இதற்கு ஆணி அறைந்தாற் போல் வேறொரு சம்பவம்...
இரயில் பயணத்தில் பிறிதொரு சமயம் நான் கண்ட காட்சி என்னுள் வேதனையை வாரியிறைத்து விட்டுச் சென்றது வாழ்விற்கு ஒரு படிப்பினையாய்!.
ஏனெனில், இவர்களுக்கோ கண்கள் இரண்டும் நன்றாக தெரிந்திருந்தது?!.
தங்கள் இயலாமையை பூச்சூடி, பொட்டுவைத்து, அலங்கரித்து உலகிற்கு காண்பிப்போர், பலகீனத்தை வெல்லத் துணிவின்றி வாழ்வைத் தொலைத்தவர்கள், ஏனோ! தெரியவில்லை, இவர்கள் வருவதைக் கண்டாலே அனைவர் முகமும் மரண பயத்தில் வெலவெலக்கும்.
யார் இவர்கள்?
நான்கைந்து பேர்கள் கொண்ட குழுவாக வந்த இவர்கள் "திருநங்கை காசு குடு அண்ணா" என்று ஒவ்வொருவரிடமும் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர், ஒரு சிலர் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என்று சில்லரைகள்ப் போட்டுவிட்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர், ஒரு சிலர் சில்லரை இல்லை என்று துரத்தாத குறையாக விரட்டினர், இருந்தும் ஒரு சில இளைஞர்களிடம் பிடிவாதம் பிடித்து இருந்ததை வாங்கமல் விடவில்லை.
நான் நண்பர்கள் நான்கைந்துபேருடன் பயணித்துக் கொண்டிருந்தேன், எங்கள் முறை வந்தது, எங்கள் யாரிடமும் சில்லறை இல்லை, பிடிவாதம் பிடித்துக் கொண்டு பணம் கொடுத்தால்தான் தான் இடத்தைவிட்டு நகர்வோம் என்ற மனநிலையில் அவர்கள் வேறுவிதமான தொல்லை கொடுக்க, நான் "ஏம்பா சில்லறை இல்லன்னுதான் சொல்றோம்ல" என்று கூற, "எவ்வளவுக்கு சில்லறை வேணும் நாங்க தாறோம்" என்று அவர்கள் ஒரு வித கவர்ச்சி நடையில் கூற "என்னடா இது தொல்லையா போச்சு" என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தேன், அவர் "இதோ மாத்திட்டு வந்துடுறேன்" என்று போனவர் போனவர்தான் திரும்பவில்லை. இறுதியில் நண்பர்களின் நகைப்பிற்கு நான் ஆளானேன். தொலைந்து போனது ஐம்பது ரூபாய்தான் ஆனால் அது என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட தவறவில்லை.
என்னுடன் படித்த சக மாணவன் ஒருவனுக்கும், இதே போல் நடையில் ஒருவித மாற்றமும், பேச்சில் ஒருவிதமாக இழுத்துப் பேசும் நடையும் இருந்தது, அறியாத வயதில் நண்பர்கள் கேலி செய்வர், இதனால் மனம் நொந்தாலும், விளையாட்டு, ஆண்களுடன் அதிகமாக பழகுதல் போன்ற முயற்ச்சிகளினால் அந்த மாணவனுள் ஒருவித மாற்றம் வந்து அவன் ஒரு ஆணாகவே தன்னை நிலைப்படுத்திக் கொண்டான், ஓவியம் வரைவதில் எங்கள் பள்ளியிலேயே அவன் தான் ஃப(ர்)ஸ்ட்.
என்ன காரணத்திற்க்காக இவர்களுள் இந்த மாற்றம் நிகழவில்லை?, இவர்கள் பெண்களாக தங்களை உருவகப்படுத்திக் கொள்ளட்டும், ஆனால் ஏன் இவர்கள் பெண்கள் சதாரணமாக பணிபுரியும் சத்துணவுக் கூடத்திலோ, ஒரு ஏற்றுமதி துணிகள் தைக்கும் நிறுவனத்திலோ அல்லது பெண்கள் பணிபுரியத்தகுந்த தொழிற்சாலைகளிலோ பணிபுரிவதில்லை?,.
ஆக! கண்கள் இரண்டும் இல்லாதிருந்த ஒரு பார்வையற்றவரிடம் இருந்த நேர்மை!, இரண்டு கண்களும் இருந்து தங்களின் செயல்களினால் குருடாகிப் போனவர்களிடம் காணவில்லையே! இப்பொழுது யார் உயர்ந்தவர்?.
இது மட்டுமா!,
ஒரு வயிற்றில் கருவாகி உருவாகி பிறந்த, சகோதர சகோதரிகளுக்குள் ஒற்றுமை?, அற்ப சொத்திற்க்காக நீதிமன்ற வாசல் ஏறி இறங்கும் அவலம்?!.
எத்தனையோ இராஜதி இராஜாக்கள், மன்னாதி மன்னர்கள் எல்லாம் சொத்து சுகத்துடன் வாழ்ந்தனர் அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? யார் சிந்திப்பது?, சிந்திப்பதற்கு நேரமும் உண்டோ? இவ்வியந்திர உலகில்!.
கள்ளம், கபடம், வஞ்சம், வெட்டு, குத்து etc...
நேர்மையற்றவர்களுக்கு முன், நேர்மையின் மூலம் உயர்ந்து நிற்கும் இது போன்ற கண்பார்வையற்றவர்களைக் குறித்துத் தாழ்த்திச் சிந்திக்க நமக்கு உள்ள அருகதை என்ன? சிந்திக்க வேண்டாமா?.
இறைவன் குர்ஆனில் மனிதனைப் பற்றிக் குறிப்பிடுகையில்..
95.4.மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்
95.5 பின்னர் அவனை(அவன் செயல்களின் காரணமாக) இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
நாம் செய்யும் செயல்கள்தான் நம் மதிப்பை இறைவனிடத்தில் உயர்த்துமேயொழிய நமது உருவ அமைப்பு கிடையாது என்பதை இவ்விறை வசனங்களின் மூலம் எளிதில் விளங்கலாம்.
40.58. குருடரும், பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரும், தீமை செய்த வரும் (சமமாக மாட்டார்கள்). குறைவாகவே நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்.
ஆதம் (அலை) அவர்களின் மார்க்கம் அனைத்திலும், இறந்ததற்குப் பின்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள் என்ற ஒன்று உண்டு, அன்று அனைவரும் அவர் அவர் செய்த செயல்களுக்கு பதிலளிக்க வேண்டும், இதில் வெற்றி பெறுபவர் யாரோ அவரே உண்மையான வெற்றியாளர்!.
மேலே நாம் கண்ட விஷயங்களில் இருந்து இந்தப் பரிட்சையில் எளிதில் வெற்றி பெருபவர் யாராக இருக்க முடியும்?.
அன்றைய தினம் அடுத்தவரின் (செயல்களின்) சுமைகளை வேறொருவர் சுமக்க மாட்டார்கள், மேலும், அடுத்தவர் செய்து கொண்டிருந்தது பற்றி நாம் விசாரிக்கப்படவும் மாட்டோம். எனவே இறைநம்பிக்கை கொண்டு நல்லது செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ள வேண்டும், நன்மை செய்ய பிறரைத் தூண்ட வேண்டும் தீமைகளின் அருகில் கூடச் செல்லக்கூடாது!. என்று குர் ஆன் கட்டளை இடுகிறது.
நண்பர்களே! இறைவன் இல்லை என்பதற்கு எவ்வாறு "கண்களை" அளவுகோலாகக் கொள்வீர்கள்?.
ஒருவர் ஒரு மதத்தில் சேர்ந்துவிட்டதனாலோ, அல்லது ஒரு மதத்தில் பிறந்து விட்டதனாலோ அவர் உயர்வடைந்து விட முடியாது!.
அவர் நடக்கும் நல்வழியே அவரை உயர்ந்தவராக்கும்!.
பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவோருக்கும் தகுந்த படிப்பினையாக இருக்கின்றனர், இந்தக் கண்பார்வையற்றவர்கள் என்றால் மிகையாகது!.
உண்மையான இறைவனை அறிந்து கொள்ள கண்பார்வையற்றோர் நமக்கோர் வழிகாட்டி!.
Tweet | ||||||
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரரே
ReplyDeleteஅடுக்கடுக்கான குர்ஆன் வசன ஓளியுடன் அருமையான எழுத்து நடை சகோ உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்
///இரயில் பயணத்தில் பிறிதொரு சமயம் நான் கண்ட காட்சி என்னுள் வேதனையை வாரியிறைத்து விட்டுச் சென்றது வாழ்விற்கு ஒரு படிப்பினையாய்!.///
நல்ல எழுத்து நடை சகோ தொடருங்கள்
This comment has been removed by the author.
Deleteவ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...)
Delete//அடுக்கடுக்கான குர்ஆன் வசன ஓளியுடன் அருமையான எழுத்து நடை சகோ உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்//
அல்ஹம்துலில்லாஹ்..
//நல்ல எழுத்து நடை சகோ தொடருங்கள்//
தங்களின் வருகைக்கும் ஊக்கமிகு பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.சையத் இப்றாஹீம் ஷா,
அருமையான சிந்தனைகள் அமைந்த சரியான பதிவு.
நன்றி சகோ.
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...)
Delete//அருமையான சிந்தனைகள் அமைந்த சரியான பதிவு//
தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ
உங்களின் பல பின்னூட்டங்கள் நான் முஸ்லிம் தளத்தில் நாத்திகர்களுக்கு விளக்கமாய், பதிலடியாய் பல முறை அமைந்திருக்கிறது.
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
நடைமுறை வாழ்வியல் குறித்த ஆழமான பதிவு!
தர்க்கரீதியான நாத்திக சிந்தனைக்கு ஆக்கப்பூர்வமான பதில்
மாஷா அல்லாஹ். நிகழ்கால ஓப்பீட்டோடு தெளிவாய் சொல்லியிருக்கிறீர்கள்
ஒரு ஐயம்!
//நாம் காண்கின்ற காட்சிகளில் நாம் இறைவனைக் காண முயலாவிடின் நமக்கு கண் இருந்தும் என்ன பயன் சகோ?.//
இப்படியான என சகோ ஹைதருக்கு இட்ட பின்னூட்டத்திற்கு
= = படைப்பினங்களை பார்த்து படைத்தவன் இருக்கிறான் என்பதை உணர்ந்துக் கொள்! என்பதாய் பொருள் கொண்டாலும்
= = காண்கின்ற காட்சிகளில் இறைவனை காண்போம் என்பது வேறு ஒரு கொள்கைக்கு இழுத்து செல்லும் (இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற கொள்கைக்கு)
இட்டு செல்லும் ஒருவழியாகவும் இவ்வாக்கியம் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் சரிப்படுத்திக்கொள்ளவும்
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...)
Delete//நடைமுறை வாழ்வியல் குறித்த ஆழமான பதிவு!
தர்க்கரீதியான நாத்திக சிந்தனைக்கு ஆக்கப்பூர்வமான பதில்
மாஷா அல்லாஹ். நிகழ்கால ஓப்பீட்டோடு தெளிவாய் சொல்லியிருக்கிறீர்கள்//
அல்ஹம்துலில்லாஹ், புகழனைத்தும் இறைவனுக்கே!.
//(இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற கொள்கைக்கு)
இட்டு செல்லும் ஒருவழியாகவும் இவ்வாக்கியம் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது//
கவனிக்கத் தவறி விட்டேன் சகோ.
சுட்டிக்காட்டியதற்கு இறைவன் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
என் கருத்து..
Delete16:48. அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடமுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன; மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ்வுக்கு வழிபடுகின்றன.
16:79. வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
என்று பார்வையுடையோரைப் பார்த்துச் சிந்திக்கச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிடுவதே என் நோக்கமாக இருந்தது, வேலைப் பளுவின் நடுவில் எழுதுவதால் ஒருசில வாக்கியங்கள் தப்பான அர்த்தம் கொடுக்கும் வகையில் அமைந்து விடுகின்றது. நான் அதைத் திருத்தி விட்டேன்.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலை நிறுத்துவானாக. ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteநீங்கள் சொல்வது போல கண்பார்வை இழந்தவர்களின் அக திறன் எப்போதும் பிரமிக்கும் ஒரு விஷயம்.நான் வழக்கமாக செல்லும் ஒரு விடுதியில் என் கையை கொடுத்ததுமே கையை தொட்டு பார்த்து இன்னார் என சொல்லும் திறனும்,அவர்களின் சந்தோஷ முகங்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.
ஒவ்வொரு முறை அவர்களை சந்தித்து விட்டு வரும் போதும் புது பாடங்கள் கற்று கொண்டு வருவது வழமை ஆகி விட்டது.அல்லாஹ் நமக்கு கொடுத்து இருக்கும் உயர்வான வாழ்க்கைக்கு அவனுக்கு சரியான விதத்தில் நன்றி செலுத்துகிறோமா என்ற கேள்வியுடன்..
நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...)
Delete//நான் வழக்கமாக செல்லும் ஒரு விடுதியில் என் கையை கொடுத்ததுமே கையை தொட்டு பார்த்து இன்னார் என சொல்லும் திறனும்,அவர்களின் சந்தோஷ முகங்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.//
சுப்ஹானல்லாஹ் - இறைவன் மிகத் தூய்மையானவன்!
//நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..//
தங்களின் வருகைக்கும் நல்ல ஒரு கருத்திற்கும் நன்றி சகோதரி!.
மிக அருமையான கருத்துகள். வாழ்த்துகள். தொடருங்கள்.
ReplyDelete//வாழ்த்துகள். தொடருங்கள்//
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!.
தங்கள் இயலாமையை பூச்சூடி, பொட்டுவைத்து, அலங்கரித்து உலகிற்கு காண்பிப்போர், பலகீனத்தை வெல்லத் துணிவின்றி வாழ்வைத் தொலைத்தவர்கள், ஏனோ! தெரியவில்லை, இவர்கள் வருவதைக் கண்டாலே அனைவர் முகமும் மரண பயத்தில் வெலவெலக்கும்.//
ReplyDeleteஇந்தக் கேள்வி என்னிடமும் இருக்கிறது அவரவர் மனநிலையைப் பொருத்தது என்று விட்டுவிடுவேன் .
என்னைப் பொறுத்தவரை கடவுள் இருப்பதாக இருந்தாலும் அதன் மூலம் அதனை மையப்படுத்தி நிகழும் பல செயல்கள் மனதிற்கு சலிப்பையும் சங்கடத்தயுமே அளிக்கிறது . அதை தவிர்த்தல் நல்லது . மூடநம்பிக்கைகள் வேண்டாமே ? என் கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும் .
நிறைய சிந்திக்க வைக்கும் பதிவு அருமைங்க .
//என்னைப் பொறுத்தவரை கடவுள் இருப்பதாக இருந்தாலும் அதன் மூலம் அதனை மையப்படுத்தி நிகழும் பல செயல்கள் மனதிற்கு சலிப்பையும்//
Deleteநிச்சயமாக உண்மையான கருத்து சகோதரி!,
ஆனால்,
கடவுள் விரும்பாத செயல்களை கடவுள் பெயரால் செய்துவிட்டு நாம் எப்படி கடவுளை குற்றம் சொல்ல முடியும்?.
ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர், என்று ஒரு துறையில் பணி புரிய வேண்டுமாயின் அது குறித்து அவர் படித்து அறிந்திருத்தல் அவசியம், ஒரு பொறியாளருக்கோ, அல்லது டாக்டருக்கோ பிறக்கும் குழந்தையை நாம் பொறியாளர் என்றோ அல்லது டாக்டர் என்றோ ஒத்துக் கொள்வோமா?
அதேபோல் இறைவனை அறிய, அவன் காட்டும் வழியில் செல்ல அது குறித்து அறிந்திருக்க வேண்டுமல்லவா?,, ஆனால் இங்கு நிலைமயோ தலைகீழ் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்துவிட்டால் அவன் இன்ன மதம் என்று அறிவுக்குப் பொருத்தமின்றி பிறப்பின் அடிப்படையில் சமுதாயம் தீர்மானித்து விடுகிறது. இது எந்தவகையில் நியாயம்?.
வயிற்றுப்பிழைப்புக்காக புரோகிதம் செய்வோரால் மதத்தின் பெயரால் தேவயற்ற வீணான சடங்குகள் இறைவன் பெயரால் அரங்கேறுகிறது, கண்டிக்கப் படவேண்டியவர்கள் இறைவனுக்கு எதிரான இதுபோன்ற மூடநம்பிக்கைகளை புகுத்தி மனிதனை வழி தவறச் செய்யும் புரோகிதர்கள் மற்றும் இமாம்கள்தான்.
//என் கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்.//
என்ன மன்னிப்பா! எவ்வளவு அருமையான (இஸ்லாத்தின்) கருத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறீகள், உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.
//நிறைய சிந்திக்க வைக்கும் பதிவு அருமைங்க//
தங்களின் வருகைக்கும், போலி மதவாதிகளுக்கான சாட்டையடி பதிலுக்கும் மிக்க நன்றி சகோதரி!.
மதத்தின் பெயரைச் சொல்லி வளரும் காட்டுமிராண்டித் தனத்தை அழிப்போம் . அதன் வழி தான் தெரியவில்லை . தங்கள் பதில் மனதிற்கு மகிழ்வைத் தந்தது நன்றி நட்பே .
ReplyDelete//மதத்தின் பெயரைச் சொல்லி வளரும் காட்டுமிராண்டித் தனத்தை அழிப்போம் .//
Deleteதங்களின் மீள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரி!.
பெரிய பதிவாக இருப்பினும் சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவே!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், மேலான கருத்திற்கும் நன்றி ஐயா!.
Delete