இழி பிறவி என்று ஏசப்படுகிறாயா? அல்லது
தாழ்வு மனப்பான்மையுடையவன் என்று தூற்றப்படுகிறாயா?
உண்மை அறியாதவனா, நீ? அல்லது இஸ்லாம் உனக்கு வழங்கிய வணக்கங்களினால் நீ அடையும் நன்மைகளைத் தெரியாதவனா?
ஓரிறையை வணங்கு என்றதற்க்காக நெருப்பைப் பரிசாக்கிய கூட்டம் பற்றித் தெரியாதா? அல்லது சிலுவையில் அறைவதற்கு எத்தனித்த கூட்டம் பற்றி அறியாதா?
கல்லடி கொடுத்த கயவர்களைப் பற்றி உனக்கு நான் சொல்லித்தான் விளங்க வேண்டுமா? என்ன?
இவர்கள் செய்த பாவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றதுதானே?
என்ன நடந்து விட்டது என்று இடிந்து போய் இருக்கிறாய்?
ஒரு குடையின் கீழ் ஏன் இருக்கிறாய்? எங்களைப் போல் பிரிவினை பேசி, அடித்துக் கொண்டு சாகு என்பவர்களின் வார்த்தை கேட்டா ?
அல்லது
ஜாதி, மொழி, இன, இன்ன பிற வெறி கொண்டு அலையும் மனிதப் பிறப்பின் மகத்துவமறியா வாய்ச் சொல் மாவீரர்களின்(???) பிதற்றல்கள் கேட்டா?
ஆபாசமே எங்கள் மூச்சு, வீண் வெட்டித்தனங்களே எங்கள் பேச்சு என்பவர்களிடமா நீ நியாத்தை எதிர் பார்க்கிறாய்?
பெண்கள் எங்களின் போகப் பொருள்களே, என்று அவர்களின் முதுகுகளைக் காட்டி மோகம் தீர்க்கும் அறிவீனர்களிடம் என்ன நியாயம் நீ எதிர்ப்பார்கிறாய் என்று புரியவில்லை?
குமரிகளை உடைகளுக்குள் மறைத்து வைக்கிறாய், ஒகே, ஆனால் கிழவிகளை ஏன் மறைத்து வைக்கிறாய்? அடப்பாவிகளா! ஒரு வயது (?) குழந்தைகளையே விட்டு வைப்பதில்லையே காமம்.
விட்டு விடு, இதுபோன்ற விஷ(ய)ங்களுக்கு விடை சொல்லப் போனால் நீ தன்னைத் தானே தாழ்திக் கொண்டவனாக வர்ணிக்கப்படுவாய்.
விட்டு விடு,
பழுத்த மரம் கல்லடி படும் என்பது முன்னோர்களின் வாக்கு.
Tweet | ||||||