தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Sunday, January 1, 2012

9 இஸ்லாமியனே! ஏனிந்த கவலை உனக்கு?

இழி பிறவி என்று ஏசப்படுகிறாயா? அல்லது
தாழ்வு மனப்பான்மையுடையவன் என்று தூற்றப்படுகிறாயா?
உண்மை அறியாதவனா, நீ? அல்லது இஸ்லாம் உனக்கு வழங்கிய வணக்கங்களினால் நீ அடையும் நன்மைகளைத் தெரியாதவனா?

ஓரிறையை வணங்கு என்றதற்க்காக நெருப்பைப் பரிசாக்கிய கூட்டம் பற்றித் தெரியாதா?  அல்லது சிலுவையில் அறைவதற்கு எத்தனித்த கூட்டம் பற்றி அறியாதா?

கல்லடி கொடுத்த கயவர்களைப் பற்றி உனக்கு நான் சொல்லித்தான் விளங்க வேண்டுமா? என்ன?

இவர்கள் செய்த பாவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றதுதானே?

என்ன நடந்து விட்டது என்று இடிந்து போய் இருக்கிறாய்?

ஒரு குடையின் கீழ் ஏன் இருக்கிறாய்? எங்களைப் போல் பிரிவினை பேசி, அடித்துக் கொண்டு சாகு  என்பவர்களின் வார்த்தை கேட்டா ?

அல்லது

ஜாதி, மொழி, இன, இன்ன பிற  வெறி கொண்டு அலையும் மனிதப் பிறப்பின் மகத்துவமறியா வாய்ச் சொல் மாவீரர்களின்(???) பிதற்றல்கள் கேட்டா?

ஆபாசமே எங்கள் மூச்சு, வீண் வெட்டித்தனங்களே எங்கள் பேச்சு என்பவர்களிடமா நீ நியாத்தை எதிர் பார்க்கிறாய்?

பெண்கள் எங்களின் போகப் பொருள்களே, என்று அவர்களின் முதுகுகளைக் காட்டி மோகம் தீர்க்கும் அறிவீனர்களிடம் என்ன நியாயம் நீ எதிர்ப்பார்கிறாய் என்று புரியவில்லை?

குமரிகளை உடைகளுக்குள் மறைத்து வைக்கிறாய், ஒகே, ஆனால் கிழவிகளை ஏன் மறைத்து வைக்கிறாய்? அடப்பாவிகளா! ஒரு வயது (?) குழந்தைகளையே விட்டு வைப்பதில்லையே காமம்.

விட்டு விடு, இதுபோன்ற விஷ(ய)ங்களுக்கு விடை சொல்லப் போனால் நீ தன்னைத் தானே தாழ்திக் கொண்டவனாக வர்ணிக்கப்படுவாய்.

விட்டு விடு,

பழுத்த மரம் கல்லடி படும் என்பது முன்னோர்களின் வாக்கு.

9 comments:

  1. தாங்களின் வருகைக்கும், சுடும் சுட்டிக்கும் நன்றி.

    ReplyDelete
  2. Replies
    1. இந்த வலைப்பூ பொக்கிஷத்தை நேரம் கிடைக்கும் பொழுது இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பார்வை இடுகிறேன்.

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே

    இன்று தான் உங்களின் வலைதளம் பார்க்கிறேன்

    பலோவர் ஆகி விட்டேன் ம்ம் நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள்

    அனைத்தும் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வேண்டிய கேள்விகள்

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  4. பிளாக் தலைப்பே நல்லாயிருக்கு
    இருளை விட்டு.... அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.,

      நண்பர் ஒருவரின் முக நூல் பகிர்ந்தளிப்பு மூலமாகத்தான் எனக்கு சகோ. ஆஷிக்கின் வலைத்தளம் அறிமுகமானது, அதன் பின் ஒவ்வொருவரின் வலைப்பூக்களும் எனக்கு அங்குள்ள லிங்கின் மூலம் தானகவே அறிமுகம் கிடைத்து விட்டது, நேரமின்மை காரணமாக பதிவு எழுத இயலாமை (சரக்கும் வேணுமே). :))

      Delete
  5. வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்..)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, தற்பொழுது நீங்கள் அனைவரும் தங்களின் எழுத்துக்கள் மூலமாக இஸ்லாத்திற்க்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது, போற்றுவோர் போற்றற்றும், தூற்றுவோர் தூற்றற்றும், நீங்கள் செய்யும் பணிகளுக்கு இவ்வுலகில் கிடைக்கிறதோ இல்லையோ, மறு உலகில் நிச்சயம் இறைவன் நற்கூலி வழங்குவான். (அவனைவிட அழகிய தீர்ப்பு வழங்குவோர் யார்?).

    "அல்லாஹ் தீர்ப்பளிப்போரிலெல்லாம் மிக்ச்சிறந்த தீர்ப்பளிப்பாளன் இல்லையா?" அல் குர்ஆன் 95-8

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.இப்ராஹிம் ஷா...

    வலைப்பூ ஆரம்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..! தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கேள்விகளை..!

    //விட்டு விடு, இதுபோன்ற விஷ(ய)ங்களுக்கு விடை சொல்லப் போனால் நீ தன்னைத் தானே தாழ்திக் கொண்டவனாக வர்ணிக்கப்படுவாய்.//---உண்மைதான் சகோ..! (சிலரிடம்)

    ஒருமுறை அங்கே சென்று தக்க ஆதாரங்களுடன் சரியான வாதங்களுடன் விடை சொன்னபிறகு... அதற்கு அவர்களின் பதிலை வைத்து... நம் பதிலை படிக்காமல் அவர்கள் அதே நிலையில் இருக்கிறார்களா... அல்லது வேறு புது சந்தேகங்கள் கேட்கிறார்களா என்பதை வைத்தே... 'விஷமா... விஷயமா' என்பதை அறிய முடிகிறது..!

    விஷம் என்று நான் அறிந்தவர்களிடம் பதில் சொல்லி விவாதிப்பதில்லை..!

    நல்ல பதிவு சகோ. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரரே!

      //அதற்கு அவர்களின் பதிலை வைத்து... நம் பதிலை படிக்காமல் அவர்கள் அதே நிலையில் இருக்கிறார்களா... அல்லது வேறு புது சந்தேகங்கள் கேட்கிறார்களா என்பதை வைத்தே... 'விஷமா... விஷயமா' என்பதை அறிய முடிகிறது..!//

      நிச்சயமாக நான் உங்களுடைய பதிவிலேயே (பல பின்னூட்டங்களின் மூலம்) இதை பார்த்திருக்கிறேன்.

      ஒரு சிலருக்கு மிக தெளிவாகவே தெரியும் எது நல்லது எது கெட்டது என்று ஆனால், அவர்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக நல்ல ஒரு கொள்கை வந்தாலும், அவர்கள் விரும்பும் அம்சங்கள் அக்கொள்கையில் இருந்தாலும் அதை கண்மூடிக் கொண்டு எதிர்ப்பதுதான் இன்றைய (என்றென்றும் இதுதான்) நிலை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் நல்லது எது தீயது எது தீர்மானிப்பது மனசாட்சிதான் என்று.

      உளவியல் ரீதியான பாதிப்புக்களை இஸ்லாமியர்களிடம் ஏற்படுத்தவே ஏற்கனவே பல அறிஞர்களால் பல முறை பதில் அளிக்கப்பட்டுவிட்ட இஸ்லாம் குறித்த காழ்ப்புணர்வு ஐயங்களை ஆங்கில இஸ்லாமிய எதிர்ப்புத் தளங்களில் இருந்து காப்பி அடித்து பின்னூட்டங்களின் மூலமும், வலைப்பதிவுகள் மூலமும் தங்கள் சொந்த சரக்குகள் போல பல பதிவிட்டு சந்தோஷம் அடைந்து கொள்கின்றனர். இவற்றைப் புரிந்து கொள்வது இஸ்லாமியர்களுக்கு நல்லது.

      Delete